விழா
நாட்டின் புதிய சட்டங்கள்
கொண்டு வந்து ஜனநாயகம்
மிதிக்கப்படுகிறது
இ. கம்யூ., கட்சி தேசிய பொதுச்
செயலாளர் ராஜா
வேலுார், ஏப். 30–
நாட்டின் புதிய சட்டங்கள் கொண்டு வந்து ஜனநாயகம் மிதிக்கப்படுவதாக இ. கம்யூ., கட்சி தேசிய பொதுச் செயலாளர் ராஜா பேசினார்.
வேலுார் வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தில், முன்னாள் எம்.பி., இரா. செழியன் நுாற்றாண்டு விழா இன்று நடந்தது. வி.ஐ.டி., வேந்தர் விசுவநாதன் தலைமை வகித்து, இரா. செழியனின் பாராளுமன்ற உரைகள் தமிழாக்கம் செய்யப்பட்ட நுால்களை வெளியிட்டார்.
இ. கம்யூ., கட்சி தேசிய பொதுச் செயலாளர் ராஜா பேசியதாவது: நாட்டின் புதிய சட்டங்கள் கொண்டு வந்து ஜனநாயகம் மிதிக்கப்படுகிறது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகம் உள்ளது. ஏழை, நடுத்தர மக்கள் மிகவும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கார்ப்பரேட்டுக்களான அம்பானி, அதானி போன்றவர்கள் மத்திய அரசின் செயலால் வளர்ந்து கொண்டே போகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் பேசுகையில், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை தமிழ்நாடு அரசு என்று தான் சொல்ல வேண்டும். அமைச்சர்களும் மக்களால்தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான். அவர்கள் கட்சி சார்ந்து செயல்படாமல் மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றார்.
முன்னாள் அமைச்சர்கள் அண்டே, பொன்னையன், வி.ஐ.டி., துணைத்தலைவர்கள் சங்கர், சேகர், செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Comments
Post a Comment