சந்திப்பு
ராணிப்பேட்டைமாவட்டம் 14-5-23
காவனூரில் 38 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்
ராணிப்பேட்டைமாவட்டம்,திமிரி அருகேயுள்ள காவனூரில் இந்திரா நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி உள்ளது இந்த பள்ளி 38 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1985-86ஆம் ஆண்டு 5-ஆம் வகுப்பு படித்து முடித்த பழைய மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி 38 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது. பள்ளி நிறுவனர் சேட்டு தலைமை தாங்கினார். பள்ளிக் கணக்காளர் லட்சுமி, தலைமை ஆசிரியர் கோபி, கணினி ஆசிரியர் .சுரேஷ், பழைய மாணவர்கள் சங்க துணைத் தலைவர் .குணாநிதி, உள்ளிட்டோர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக ஹைதராபாத் எக்ஸெல் மருத்துவமனை டாக்டரும், முன்னாள் மாணவர் சங்க செயலாளருமான மருத்துவர்.பிரபு, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் 38 ஆண்டுகள் பள்ளி கல்வி சேவையை பாராட்டி நிர்வாகிக்கு திமிரி தமிழ் இலக்கியப் பேரவை சார்பில் வாழ்த்து மடல், பழைய மாணவர்கள் சார்பில் மலர் கிரீடம் அணிவிக்கப்பட்டது. பழைய மாணவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களின் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் ஆண்டிற்கு 2 முறை மக்கள் பயன்பெறும் வகையில் பொது மருத்துவ முகாம் பள்ளியில் நடத்த முடிவு செய்தனர்
Comments
Post a Comment