கைது

டாஸ்மாக் ஊழியரிடம் கொள்ளையடித்த
2 பேர் கைது

வேலுார்: மே 14–
டாஸ்மாக் ஊழியரிடம் கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த மெட்டுக்குளத்தை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் திருவலம் டாஸ்மாக் கடையில் சூப்பிரைசராக பணியாற்றி வருகிறார்.  கடந்த 8 ம் தேதி இரவு வசூல் ஆன விற்பனை தொகை 2. 57 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு தனது வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து தாக்கி பணத்தை  கொள்ளையடித்துச் சென்றனர். திருவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த சரவணன், 32, ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தை சேர்ந்த தாமு, 23, ஆகியோர் அசோக்குமாரிடம் பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இரண்டு பேரை போலீசார் இன்று  கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்