விழா
கெங்கையம்மன் கோவில்
சிரசு திருவிழா
குடியாத்தம்: மே 15–
வேலுார் மாவட்டம், குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா இன்று நடந்தது.
வேலுார் மாவட்டம், குடியாத்தத்தில் பிரசித்திப்பெற்ற கெங்கையம்மன் கோவிலில்ந சிரசு திருவிழா இன்று நடந்தது. இதில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்காக குடியாத்தம் முத்ததோியாலம்மன் கோவிலிலிருந்து சிரசு ஊர்வலம் புறப்பட்டு கெங்கையம்மன் கோவிலுக்கு வந்தடைந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்காக இன்று உள்ளூர் அரசு விடுமுறை விடப்பட்டது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநில்ங்களிலிருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர். 25 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. வேலுார் சரக டிஐஜி முத்துசாமி தலைமையில் பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர்.
சிரசு ஊர்வலம் வரும் பாதையில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர், மேலும் ஊர்வலத்தின் மீது மிளகு, உப்பு துாவினர்.
தொடர்ந்து அம்மன் சிரசு ஊர்வலம், கண் திறப்பு, வாண வேடிக்கை நடந்தது. நாளை 16 ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, 17 ம் தேதி பூப்பல்லக்கு விழா, 22 ம் தேதி விடையேற்றி விழா நடக்கிறது. இதையொட்டி 15 ம் தேதி மட்டும் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் சஙே்கர், ஆய்வாளர் பாரி, செயல் அலுவலர் திருநாவுக்கரசு, ஊர் நாட்டாண்மை சம்பத், கெளவர ஊர் தலைவர் பிச்சாண்டி செய்தனர்.
Comments
Post a Comment