தப்பல்

அரசு கூர்நோக்கு பாதுகாப்பு
இல்லத்திலிருந்து 7 சிறுவர்கள்
தப்பி ஓட்டம்


வேலுார், ஏப். 29–
வேலுார் அரசு கூர்நோக்கு பாதுகாப்பு இல்லத்திலிருந்து 7 சிறுவர்கள்  தப்பி ஓடினர்.
வேலுார் மாவட்டம், வேலுார் காகிதப்பட்டறையில் அரசு கூர்நோக்கு பாதுகாப்பு இல்லம் உள்ளது. இங்கு பல்வேறு குற்றங்கள் செய்த  42 சிறுவர்கள்   அடைக்கப்பட்டுள்ளனர்.  கடந்த மாதம் 27 ல்  இரவு 8:00  மணிக்கு இல்லத்திலிருந்த ஆறு சிறுவர்கள் அங்கிருந்த மூன்று காவலர்களை  தாக்கி விட்டு தப்பினர்.  வேலுார் வடக்கு போலீசார்  தனிப்படை அமைத்து துந்து  பேரை பிடித்து இல்லத்தில் அடைத்தனர்.
கடந்த 13 ல் இரவு 9:00  மணிக்கு ஐந்து சிறுவர்கள் சுவர் ஏறி  குதித்து  தப்பியோடினர். இரண்டு மணி நேரத்தில் போலீசார் அவர்களை   பிடித்து இல்லத்தில் அடைத்தனர்.  இல்லத்தில் இருந்த சிறுவர்களிடம் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேச்சு வார்த்தை நடத்தி  கவுன்சிங் அளிகவும் ஏற்பாடுகள் செய்தார். இல்லத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இல்லத்தின் சுற்றுச் சுவர் அதிகரிக்கப்பட்டது.
இல்லத்தை சுற்றிலும் 24 மணி நேரம் போலீசார் ரோந்து சென்று வந்தனர். இல்லத்தின் வெளிப்புறம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று (27 ) இரவு 8:00 மணிக்கு சிறுவர்கள் இரவு சாப்பிட்டு விட்டு அவரவர் அறைகளில் அடைக்கப்பட்டனர். இரவு 11:00 மணிக்கு இல்லத்தில் பி பிளாக்கில் இருந்த ஏழு சிறுவர்கள் கழிவறை ஜன்னலை உடைத்து வெளியே வந்தனர்.
அவர்களுக்கு வழங்கப்பட்ட போர்வைகளை கயிறு  போல இணைத்து சுற்றுச் சுவர் கம்பி மீது கட்டி ஏறி குதித்து தப்பி ஓடினர். சிறுவர்கள்  தப்பியது இன்று (28) அதிகாலை 1:00 மணிக்கு  தான் இல்ல காவலர்களுக்கு தெரிந்தது. இதையடுத்து வேலுார் மாவட்ட எஸ்.பி.ராஜேஷ் கண்ணன் தலைமையில் போலீசார் தப்பியோடிய சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சென்னை– பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பெருமுகையில் பஸ்சில் ஏற காத்திருந்த இரண்டு சிறுவர்களை மடக்கி பிடித்து இல்லத்தில் அடைத்தனர்.  ஐந்து சிறுவர்களை பிடிக்க நான்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பிடிபட்ட இரண்டு சிறுவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், இல்லத்தில் உள்ள அனைத்து சிறுவர்கள் தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்ததும், முதல் கட்டமாக பி பிளாக்கில் ஏழு சிறுவர்கள் தப்பியதும், அதே பாணியை கையாண்டு சில தினங்களில் மற்றவர்களும் தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்தது  தெரியவந்தது.
வேலுார் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்