திருட்டு
தொழிலாளி வீட்டில்
28 பவுன் நகை திருட்டு
ஆம்பூர், ஏப். 28–
ஆம்பூர் அருகே, தொழிலாளி வீட்டில் 28 பவுன் நகை திருடியவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அருகே சின்னபள்ளிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன், 50. இவர் வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்தினடன் நேற்று சென்னைக்கு சென்றனர். இன்று காலை 10:00 மணிக்கு வந்த போது வீட்டில் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்த கிடந்தது. உள்ளே சென்று பார்த்தில், பீரோ உடைத்து அதிலிருந்த 28 பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. உம்மராபாத் போலீசார் விசாரிக்கின்றனர்.
Comments
Post a Comment