பலி
பைக் மீது லாரி மோதி
கணவர், மனைவி பலி
கீழ்பென்னாத்துார்: மே 13–
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அடுத்த பூங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 55. விவசாயி. இவர் மனைவி தங்கமணி, 47. இந்நிலையில் நேற்று இரவு 8:00 மணிக்கு இவர்கள் இருவரும் பைக்கில் திருவண்ணாமாலை மாவட்டம், கீழ்பென்னாத்துாரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். பின்னர் இருவரும் நள்ளிரவு 12:00 மணிக்கு பைக்கில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
கீழ்பென்னாத்துார் சந்தைமேடு என்ற பகுதியில் சென்ற போது பின்னால் வந்த லாரி பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் சம்பவம் நடந்த இடத்திலேயே இருவரும் இறந்தனர். கீழ்பென்னாத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
Comments
Post a Comment