தாக்கல்

வேலூர்    12-4-23


யானை தாக்கியதில் பெண் படுகாயம்-  கவலைக்கிடமான நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை 
______________________________
    வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டு பகுதியை சேர்ந்தவர் விவசாயி கோகிலா ( 51) வனப்பகுதியை ஒட்டி உள்ள தனது விவசாய நிலத்திற்கு சென்ற போது  யானை நிலத்தில் இருந்துள்ளது யானையிடமிருந்து தப்பி கோகிலா ஓடியுள்ளார் இருப்பினும் யானை அவரை துரத்தி  தாக்கியதில் கோகிலா படுகாயம் அடைந்து  சிகிச்சைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதுகில் உள்ளது அனைத்து எலும்புகளும் யானை தாக்கியதில் உடைந்து தூளானதால் மேல் சிகிச்சைக்காக கவலைக்கிடமான நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் பெண்ணை யானை தாக்கிய  சம்பவம் குறித்து பேரணாம்பட்டு காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 
    கடந்த சில மாதங்களாகவே யானைகள் தொடர்ந்து பேர்ணாம்பட்டு கிராம பகுதிகளில் வந்து விவசாயிகளின் விளைபயிர்களை நாசம் செய்வதுடன் ஆட்களை தாக்கி காயப்படுத்தி வந்த நிலையில் வனத்துறையினர் யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்காததால் பெண் விவசாயி யானை தாக்கியதில் கவலைக்கிடமான நிலையில் உயிருக்கு போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்