அச்சம்
திருப்பத்தூர்மாவட்டம் 14-5-23
ஆத்தூர் குப்பம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும் இரண்டு யானைகள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சம்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியான தகரகுப்பம், தண்ணீர் பந்தல், கரடிகுட்டை பகுதியில் இரண்டு காட்டு யானைகள் அப்பகுதியில் முகாமிட்டிருந்தன இந்த நிலையில் வனத்துறை மற்றும் வருவாய் துறையினர் நேற்று யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு ட்ரோன் கேமரா மூலம் யானைகள் முகாமிட்டுள்ள இடத்தை கண்டறிய முயற்சி செய்தனர் அப்போது தகரகுப்பம் அடர்ந்த காப்பு காட்டுக்குள் யானைகள் முகாமிட்டு இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டு அங்கிருந்து வனத்துறை மற்றும் வருவாய் துறையினர் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.இந்த நிலையில் இன்று ஆத்தூர் குப்பம் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையை இரண்டு யானைகளும் கடந்து சென்றது இதன் காரணமாக அப்பகுதி மக்கள் மட்டுமின்றி வாகன ஓட்டிகள் அச்சத்தில் உறங்கி உள்ளனர் மேலும் உடனடியாக காட்டுப்பகுதியில் யானைகளை விரட்டியடிக்க வனத்துறையினருக்கு கோரிக்கையும் வைத்து வருகின்றனர் இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் யானை நடமாட்டமுள்ள பகுதியை ஆய்வு செய்து மக்கள் பாதுகாப்பாக இருக்க கோரிக்கை விடுத்தார்
Comments
Post a Comment