கைது
போதை மாத்திரை விற்ற
3 பேர் கைது
வாலாஜாபேட்டை: மே 14–
போதை மாத்திரை விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை மது விலக்கு போலீசார் நேற்று இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அக்ராவரம் ரயில்வே பாலத்தின் மீது சந்தேகத்திற்கிடமாக சுற்றிக் கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், ராணிப்பேட்டை மாவட்டம், காரையை சேர்ந்த பிரதீப், 26, அம்மூர் ராஜ்குமார், 23, மேல்புதுப்பேட்டையை சேர்ந்த சரவணன், 22, என்பதும், இவர்கள் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இளைஞயர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
போலீசார் இவர்களை கைது செய்து 20 கிபோ போதை மாத்திரைகள், ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா, கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Comments
Post a Comment