ஆர்பாட்டம்
ராணிப்பேட்டைமாவட்டம் 14-5-23
வாலாஜா அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் நிர்வாக சீர் கேட்டை கண்டித்து பாமகவினர் ஆர்பாட்டம்
___________________________________
ராணிப்பேட்டைமாவட்டம்,வாலாஜா மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து பாமக மேற்குமாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது இதில் பாமக முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.கே.முரளி துவங்கி வைத்தார் இதில் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் இளங்கோ மாவட்டத்தலைவர் ஆறுமுகம் முதலியார் ,நகர செயலாளர் ஜானகிராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் மருத்துவர்கள் கிடையாது பகல் நேரத்திலும் மருத்துவர்கள் சரியாக பணிக்கு வருவது கிடையாது மேலும் நோயாளிகளை தரக்குறைவாக நடத்துவது மக்களிடம் பிரசவம் உள்ளிட்டவைகளுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்வது போன்ற பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதுடன் மருந்துகளை விற்பனை செய்துவிட்டு நோயாளிகளுக்கு ஊசி மாத்திரைகளை வெளியில் வாங்கி வருமாறு வற்புறுத்துகின்றனர் இதனால் ஏழை எளிய கிராமப்புற மக்கள் கடுமையாக பாதிக்கபடுகின்றனர் எந்த சிகிச்சையாக இருந்தாலும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிடுகின்றனர் இது போன்ற அவலங்களை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள் இதில் திரளான பாமகவினர் கலந்துகொண்டனர்
Comments
Post a Comment