தேர் திருவிழா
தேரோட்டம்
குடியாத்தம்: மே 14–
வேலுார் மாவட்டம், குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா நாளை 15 ம் தேதி நடக்கிறது. இதையொட்டி கெங்கையம்மன் தேராட்டம் இன்று நடந்தது. இதற்காக கெங்கையம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு உற்றவர் அலங்கரிக்கப்பட்டு தேரில் வைக்கப்பட்டது. இந்த தேர் குடியாத்தம் தர்ணம்பேட்டை, நடுப்பேட்டை வழியாக குடியாத்தம் முக்கிய வீதிகள் வழியாக தேரேட்டம் சென்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர்.
வழி நெடுக்க உப்பு, மிளகு ஆகியவற்றுடன் ரூபாய் நாணயங்களை தேர் மீது வீசி இறைத்து பக்தர்கள் தங்கள் நேர்திக் கடன் செலுத்தினர். மேலும் கோழிகளை பலியிட்டும் நேர்த்திக் கடன் செலுத்தினர். குடியாத்தம் வருவார் கோட்டாச்சிர் வெங்கட்ராமன், தாசில்தார் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு மற்றும் கோவில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வேலுார் மாவட்ட எஸ்.பி., ராஜேஷ் கண்ணன் தலைமையில் 1200 போலீசார் பாதுகாப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நாளை 15 ம் தேதி அம்மன் சிரசு ஊர்வலம், கண் திறப்பு, வாண வேடிக்கை நடக்கிறது. 16 ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, 17 ம் தேதி பூப்பல்லக்கு விழா, 22 ம் தேதி விடையேற்றி விழா நடக்கிறது. இதையொட்டி 15 ம் தேதி மட்டும் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விழாவில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து 2 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
Comments
Post a Comment