தற்கொலை
ஆற்காடு அருகே குடும்ப தகராறு
2 குழந்தைகளை கொலை செய்து விட்டு
தாய் தற்கொலை
ஆற்காடு, ஏப். 28–
ஆற்காடு அருகே, குடும்ப தகராறில் இரண்டு குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே மேல்புலம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர், 40. இவர் சென்னை கோயம்பேடிலுள்ள சலுான் கடையில் பணியாற்றி வருகிறார். மனைவி ரேணுகா, 35. தம்பதிக்கு சுருதி, 5, என்ற மகளும், தீபக், 3, என்ற மகனும் உள்ளனர். இன்று மாலை 4:00 மணிக்கு அதே பகுதியிலுள்ள விவசாய கிணற்றில் ரேணுகா, சுருதி, தீபக் ஆகியோர் சடலமான மிதந்தனர். கலவை போலீசார் மூவரின் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அதில், சங்கர் சென்னையில் பணியாற்றுவதால் 15 நாளுக்கு ஒரு முறைதான் வீட்டிற்கு வருவார். இதனால் அவரது தாய் சரஸ்வதி, 65, என்பவர் மறுமகள் ரேணுகாவை பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். இதனால் விரத்தியடைந்த ரேணுகா சுருதி, தீபக் ஆகியோரை கிணற்றில் தள்ளி கொலை செய்த விட்டு, அவருக்கும் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
Comments
Post a Comment