கைது
மணல் கடத்தலில் ஈடுபட்டால்
குண்டாசில் கைது கலெக்டர்
பாஸ்கர பாண்டியன்
திருப்பத்துார், ஏப். 29–
மணல் கடத்தலில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் எச்சரிக்கை விடுத்தார்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அருகே வெங்கடசமுத்திரம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் இன்று நடந்தது. மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் 210 பேருக்கு 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: திருப்பத்துார் மாவட்டத்தில் ஓடும் பாலாற்றில் கள்ளத்தனமாக மணல் அள்ளி கடத்தப்படுகிறது. மணல் கடத்தலில் ஈடுபடுகிறவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். ஆற்று மணலை பாதுகாப்பது அதிகாரிகள், மக்கள் கடமையாகும். இவ்வாறு அவர் பேசினார்.
Comments
Post a Comment