கைது
வேலூர் மாவட்டம் திருவலம் EB கூட்ரோடு டாஸ்மாக் சூப்பர்வைசர் மதுபான விற்பனைத் தொகையை மறுநாள் வங்கி கணக்கில் செலுத்த வேண்டி தனது வீட்டிற்கு இருசக்கர வாகனம் ஹோண்டா ஆக்டிவா வில் கடந்த 08.05.23 ம் தேதி இரவு 08.50 மணி அளவில் செல்லும்போது மர்ம நர்கள் மூன்று பேர் இவரை கண்காணித்து பின் தொடர்ந்து சென்று தற்செயலாக வாகன விபத்தை ஏற்படுத்துவது போல் மோதி அவரை காப்பாற்றுவது போல் நாடகமாடி டாஸ்மாக் சூப்பர்வைசர் வைத்திருந்த ரூபாய் 257000/ பணம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்து சென்று விட்டனர்.*
*இது விஷயமாக டாஸ்மாக் சூப்பர்வைசர் திரு.G. அசோக் குமார், த/ பெ கோவிந்தராஜ், மெட்டுக்குளம் காட்பாடி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் திருவலம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.*
*இச்சம்பவம் சம்பந்தமாக வேலூர் மாவட்ட எஸ்பி திரு. ராஜேஸ் கண்ணன் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் திரு.ராஜசேகர் அவர்கள் தலைமையில் ஒரு தனிப்படையும், காட்பாடி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.பழனி அவர்களின் உத்தரவின் பேரில் ஒரு தனிப்படையும், காட்பாடி காவல் ஆய்வாளர் திரு. தமிழ்ச்செல்வன் தலைமையில் ஒரு தனிப்படையும் மொத்தம் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து குற்றவாளிகளை தேடி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.*
*இந்நிலையில் இன்று 11.05.23 ம் தேதி எதிரிகள் 1)* *சரவணன் என்ற குட்லு/32*
*த/பெ கோவிந்தராஜ்*
*சைதாப்பேட்டை* *சென்னை.*
*2) தாமோதரன் என்ற தாமு /23*
*NO 241, சிறு* *காவேரிப்பாக்கம்* *காஞ்சிபுரம் மாவட்டம்.*
*என்ற இரு குற்றவாளிகள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.* *சம்பவம் நடந்து 48* *மணி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு இன்று 12.05.23 ம் தேதி நீதிமன்ற* *காவலுக்கு ஆஜர் படுத்தப்பட்டனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட வாகனம் மற்றும் குறிப்பிட்ட அளவு பணம் எதிரிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் தலைமறைவாகி உள்ள மூன்றாவது எதிரியை தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளை கண்டுபிடித்து கைது செய்தமைக்காக மாவட்ட எஸ்பி திரு. ராஜேஸ் கண்ணன் இ. கா.ப அவர்கள் பாராட்டு தெரிவித்தார்.*
Comments
Post a Comment