ஆலோசனை கூட்டம்
அண்ணாநகர்
வீட்டு வசதி வாரிய
குடியிருப்போர் நல சங்க
ஆலோசனை கூட்டம்
சென்னை, மே 27–
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம், திட்டம் 205
(HIG) குடியிருப்போர் நல சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் குடியிருப்பில் இன்று 27 ம் தேதி மாலை நடந்தது. இதில் எச்ஐஜி வீடு ஒதுக்கீடு பெற்ற உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில், சென்னை அண்ணாநகர் கோட்டம், அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம், 205 குடியிருப்புக்கள் திட்டம், சுயநிதி திட்டத்தில் கட்டப்பட்ட 45 உயர் வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்பில் அனைத்து வீடுகளும் விற்பனையாகி விட்டது.
இந்த திட்டத்தில் பணிகள் ஆரம்ப காலம் 2020ம் ஆண்டு. 18 மாதத்தில் வீடுகள் கட்டப்பட்டு 2021 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ம் தேதி பணிகள் முடிந்து பயனாளிகளுக்கு வீடுகள் வழங்க வேண்டும் என வாரியத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் இன்னமும் வீடுகள் வழங்கப்படவில்லை.
95 சதவீதம் பணத்தை செலுத்தி விட்டு வீடுக்காக இரண்டு ஆண்டுகளாக காத்துக்கிடக்கிறார்கள். தற்போது வீடுகள் மட்டும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த திட்ட பகுதியில் மின் இணைப்பு வழங்கி ஒவ்வொரு வீட்டிற்கும் 3 பேஸ் மின்சார கருவி பொருத்த வேண்டும்.
திட்டத்தில் குறிப்பிட்டுள்ள பகுதிகளில் லிப்ட்டுக்கள் அமைக்கப்பட வேண்டும். மெட்ரோ வாட்டர் திட்டப்பணிகள் கொண்டு வந்து விரைவில் அனைத்து வீடுகளுக்கும் பைப் இணைப்பு வழங்க வேண்டும். தற்காலிகமாக லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து தரும் திட்டத்தை கை விட வேண்டும்.
இந்த குடியிருப்பு பகுதியில் நிரந்திரமாக கழிவறை திட்டத்தை அமைக்க வேண்டும். குலுக்கலே இல்லாமல் பயனாளிகளுக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கார் பார்க்கிங்கிற்கு மட்டும் குலுக்கல் என்று கூறுகின்றனர். எனவே வீட்டுற்கு ஒதுக்கீடு ஆணை வழங்கும் போது கார் பார்கிங்கிற்கும் சேர்த்தே ஆணை வழங்க வேண்டும்.
இது போன்ற பிரச்சனைகளை முழுமையாக முடித்து குறிப்பிட்ட தேதிக்குள் வீடுகளை ஒப்படைக்க வேண்டும்.
இதற்காக வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் திரு. முத்துசாமி, வாரியத்தலைவர் திரு. பூச்சி முருகன், வீட்டு வசதி வாரிய செயலாளர் மற்றும் வாரிய மேலாண்மை இயக்குனர், வாரியத்தின் அண்ணாநகர் மேற்கு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி ஆகியோரை நேரில் சந்தித்து மனு கொடுப்பது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Comments
Post a Comment