கைது
போலி டாக்டர்
இருவர் கைது
வேலுார், ஏப். 14–
சத்துவாச்சாரியதில். ேஹாமியோபதி படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலுார் மாவட்டம், சத்துவாச்சாரியில் போலி டாக்டர்கள் பலர் கிளினிக் வைத்து சிகிச்சை அளிப்பதாக சுகாதாரத்துறையினருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து வேலுார் சுகாதாரத்துறையினர் இன்று சத்துவாச்சாரியில் உள்ள பல கிளினிக்குகளில் ஆய்வு செய்தனர்.
அதில், விஜயராகவபுரத்தில் வெங்கடேசன், 59, ரங்காபுரத்தில் தயாளன், 73, ஆகியோர் ேஹாமியோபதி படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததும், ஆங்கில மருந்து, மாத்திரைகளை நோயாளிகளுக்கு கொடுத்து வந்ததும், அவர்கள் போலி டாக்டர்கள் என தெரியவந்தது. சுகாதாரத்துறையினர் இரண்டு கிளினிக்குகளை மூடி சீல் வைத்தனர். சத்துவாச்சாரி போலீசார் வெங்கடேசன், தயாளனை கைது செய்தனர்.
Comments
Post a Comment