பேட்டி
வேலூர் 20-6-23
வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலயம் வரும் 25 ஆம் தேதி 4 ஆவது மகா கும்பாபிஷேகம் ரூ.5 கோடி செலவில் தங்க கொடிமரம் தகடுகள் பொருத்தப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது 1120 சிறிய கலசங்களுடன் 150 பெரிய கலசங்களுடன் பிரம்மாண்ட யாக சாலை அமைத்து கும்பாபிஷேகம் நடக்கும் லட்சகணக்கான மக்கள் திரள்வார்கள் - ஆலய நிர்வாகிகள் பேட்டி
_______________________________
வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டையில் புகழ்பெற்ற ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயம் உள்ளது வரலாற்றுசிறப்பு மிக்க ஆலயம் 400 ஆண்டுகள் வழிபாடில்லாமல் மூடப்பட்டிருந்தது 1981 ஆம் ஆண்டு தான் மக்களின் உதவியுடன் பொதுமக்களே வழிபாட்டிற்காக திறந்து இன்றுவரையில் நிர்வகித்து வருகின்றனர் மக்களால் நிர்வாகிக்கபடும் ஆலயம் கும்பாபிஷேகம் குறித்தும் நிர்வாகிகள் சண்முகம்,சுரேஷ்,சச்சிதானந்த சுவாமிகள் வெங்கடசுப்பு ,ரமேஷ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் இந்த ஆலயம் 4 ஆவது கும்பாபிஷேகம் முன்னிட்டு மக்கள் உதவியுடன் இரண்டு கொடிமரங்கள் கோபுர கலசங்கள் போன்றவைகள் தங்க தகடுகள் பொருத்தப்பட்டு மூலஸ்தான ஜலகண்டீஸ்வரருக்கு ஸ்வர்னபந்தனமும் செய்யபடுகிறது தங்கத்தின் மதிப்பு ரூ.5 கோடியாகும் 54 யாக குண்டகள் அமைத்து 170 -க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் 4 கால யாகங்கள் நடத்தி சிறிய கலசங்கள் 1120 வைத்து பூஜைகள் செய்து வரும் 25 ஆம் தேதி 9.30 மணிக்கு மேல் மஹாகும்பாபிஷேகம் நடைபெறும் 40 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது கோட்டையில் மக்கள் வருகைக்காக விரிவான ஏற்பாடுகளை கோட்டையும் ஜலகண்டீஸ்வரர் தரும ஸ்தாபனமும் செய்துள்ளது என்று கூறினார்கள்
Comments
Post a Comment