கைது
கிளினிக் நடத்தி கருக்கலைப்பு
செய்து வந்த போலி டாக்டர் கைது
ஆம்பூர், ஏப். 23–
ஆம்பூர் அருகே கிளினிக் நடத்தி கருக்கலைப்பு செய்து வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டத்தில் நுாற்றுக்கணக்கான போலி டாக்டர்கள் கிளினிக் நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார். கடந்த வாரம் திருப்பத்துார், வாணியம்பாடி, நாட்றம்பள்ளி பகுதியில் கிளினிக் நடத்தி வந்த ஏழு போலி டாக்டர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், ஆம்பூர் அருகே வெங்கடசமுத்திரம் கிராமத்தில், 2ம் வகுப்பு மட்டும் படித்து விட்டு கிளினிக் நடத்தி பெண்களுக்கு கருக்கலைப்பு செய்து வந்த போலி டாக்டர் இமானுவேல், 60, என்பவரை உம்மராபாத் போலீசார் இன்று கைது செய்தனர்.
Comments
Post a Comment