சந்திப்பு

நாள்.09.04.2023
*ஜேக்டோ ஜியோ பேரமைப்பு நிர்வாகிகள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுடன் சந்திப்பு* 
---------------------
பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை படுத்த கோருதல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி வேலூர் மாவட்ட ஜாக்டோ - ஜியோ சார்பில் மாண்புமிகு நீர்வளம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவர்களையும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் எ.பி.நந்தகுமார், வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் து.மு.கதிர்ஆனந்த், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் பா.கார்த்திகேயன் ஆகியோரை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தனர்.  மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கனிவான பார்வைக்கு கொண்டு சென்று கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரினோம்.  உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.  
இந்த சந்திப்பின் போது  ஜாக்டோ ஜியோவின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும் தொழிற்கல்வி ஆசிரியர கழகத்தின் தலைவருமான செ.நா.ஜனார்த்தனன், தமிழ்நாடு கல்வித்துறை அலுவலர் சங்க மாநிலத்தலைவரும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளருமான அ.சேகர் வேளாண்மை ஆசிரியர் சங்க மாநில பொருளாளர் அக்ரி.இ.ராமன் தமிழ்நாடு ஆசிரியர் காப்பாளர் உரிமை பாதுகாப்பு சங்க மாநில பொதுச்செயலாளர் துரை கருணாநிதி ஆகியோர் தலைமை தலைமையில் 
வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ஆ.சீனிவாசன், தமிழக தமிழாசிரியர் கழக மாவட்ட தலைவர் ஜி.சீனிவாசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் சுமதி, உயர்மட்ட குழு உறுப்பினர்கள்   தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ஜி.டி.பாபு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட தலைவர் அல்போன்ஸ்கிரி, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் பெ.இளங்கோ, தியாகராஜன், குமார், ஜி.சுந்தரலட்சுமி,  பா.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  
கோரிக்கைகள் 
1. பங்கேற்பு புதிய ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
2. அகவிலைப்படி 4%சதவீதம் கடந்த 1.7.2022முதல் வழங்கிட வேண்டும். 3.சரண்விடுப்பு தடை ஆணையை ரத்து செய்து சரண்விடுப்பு சம்பளம் பெற தமிழக அரசு உத்தரவு வழங்க வேண்டும்.              .    
3. வெளிமுகமை (Outsourcing) முறையில் அத்து கூலிகளாக தமிழகத்தில்  அனைத்து துறைகளிலும் தற்காலிகமாக  அரசாணை எண்.115;139;152ன்படி நியமனம்  செய்வதை ரத்து செய்து தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 6லட்சம் பணி இடங்களை உடனடி யாக நிரப்பிட வேண்டும்.                   
4. தொழிற்கல்வி ஆசிரியர்கள் 171பேருக்கும், பகுதிநேர ஆசிரியர்கள்,  தொகுப்பு ஊதியம், சிறப்புஊதியம், மதிப்பூதியம் போன்றவற்றில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர்க்கு கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும் 
5. இடைநிலை மற்றும் முதுகலை   ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். 
6. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் அரசு துறையில் பணி புரியும் ஊழியர்களை அத்துக்கூலிகளாக மாற்றும் அரசாணை 115, 139, 152 ரத்து செய்ய வேண்டும். 
7. அதே போல் இளைஞர்களின் வேலை வாய்ப்பை கேள்விக் குறியாக்கும் அவுட் சோர்சிங் முறையை கைவிட வேண்டும்
உள்ளிட்ட 15அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி மனுக்களை வழங்கி பேசினர்.  கோரிக்கை மனுமீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி கூறினார்கள்.

 (செ.நா.ஜனார்த்தனன் மாநிலத்தலைவர் 
தொழிற்கல்வி ஆசிரியர் கழக 
மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் 
9443345667)

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்