தற்கொலை
மகளை கழுத்து நெரித்து
கொலை செய்து விட்டு
ஊராட்சி செயலாளர் தற்கொலை
வேலுார், ஏப். 21–
காட்பாடி அருகே, மகளை கழுத்து நெரித்து கொலை செய்து விட்டு ஊராட்சி செயலாளர் தற்கொலை செய்து கொண்டார்.
வேலுார் மாவட்டம், காட்பாடி அருகே பெரியாங்குப்பத்தை சேர்ந்தவர் பாபு, 48. இவர் காங்குப்பம் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தார். இவர் மனைவி வேண்டாலட்சுமி, 40, என்பவர் மாச்சனுார் பகுதியில் அங்கன்வாடி மையத்தில் சமயைலராக பணியாற்றி வந்தார். தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
மூத்த மகள் லோசினி, 18, வேலுாரில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., முதலாமாண்டு படித்து வருகிறார். இளைய மகள் தனுஜா, 16, மனநலம் குன்றியதால் படிக்காமல் வீட்டில் தனியாக இருந்தார்.
நேற்று (19) பாபு, வேண்டாலட்சுமி ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர். லோசினி கல்லுாரிக்கு சென்று விட்டார். தனுஜா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அன்று இரவு 9:00 மணிக்கு வேண்டாலட்சுமி வீட்டுக்கு வந்த போது படுக்கை அறையில் தனுஜா இறந்து கிடந்தார். கணவர் பாபு கழிவறையில் துாக்கிட்டு இறந்து கிடந்தார். கே.வி. குப்பம் போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அதில், மன நலம் குன்றியதால் தனுஜா அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று விடுவார், அவரை தேடி பிடித்து அழைத்து வருவார்கள். இதனால் வீட்டில் இருந்தவர்கள் விரக்தியில் இருந்தனர். நேற்று மதியம் வீட்டுக்கு வந்த தந்தை பாபு, மகள் தனுஜாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அவரும் கழிவறையில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
Comments
Post a Comment