பிடித்தனர்

வேலுார் அரசு கூர்நோக்கு
பாதுகாப்பு  இல்லத்திலிருந்து
சுவர் ஏறி  குதித்து ஓடிய
5 சிறுவர்களை போலீசார்
பிடித்தனர்


வேலுார், ஏப். 15–
வேலுார் அரசு கூர்நோக்கு பாதுகாப்பு  இல்லத்திலிருந்து சுவர் ஏறி  குதித்து ஓடிய 5 சிறுவர்களை போலீசார் பிடித்தனர்.
வேலுார் மாவட்டம், வேலுார் அரசு கூர்நோக்கு பாதுகாப்பு இல்லத்திலிருந்து சிறுவர்கள் அடிக்கடி தப்பியோடுவது தொடர் கதையாக நடந்து வருகிறது.  நேற்று  (13) இரவு 9:00  மணிக்கு ஐந்து சிறுவர்கள் சுவர் ஏறி  குதித்து  தப்பியோடினர். பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்கள் கொடுத்த புகார்படி வேலுார் கலெக்டர் அலுவலகம் வழியாக தப்பிச்செல்ல முயன்ற அவர்களை வேலுார் போலீசார்  மடக்கி பிடித்து இல்லத்திற்கு அழைத்து வந்தனர்.
அப்போது இல்லத்திலிருந்த 10 சிறுவர்கள் கட்டடத்தின் மேலே ஏறி தங்களை ஜாமினில் வெளியேவிடும்படி ரகளையில் ஈடுபட்டனர். வேலுார் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அவர்களை சமாதானப்படுத்தினர். இதனால் அவர்கள் ரகளையை  கை விட்டு கட்டடத்திலிருந்து கீழே இறங்கி வந்தனர்.
மாவட்ட கலெக்டர் குமாரவேல்  பாண்டியன் கூறியதாவது: வேலுார் அரசு கூர்நோக்கு பாதுகாப்பு இல்லத்திலிருந்த  12 சிறுவர்கள் கடந்த மாதம் 28 ம் தேதி ரகளையில் ஈடுபட்டு மின்விசிறி, நாற்காலிகளை உடைத்தனர். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு  செய்துள்ளனர். இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், இதில் சம்மந்தப்பட்ட சில சிறுவர்கள் தங்களுக்கு ஜாமின் கேட்டனர். நீதிமன்றத்தில் ஜாமின் மறுக்கப்பட்டதால் கட்டடத்தில் ஏறி ரகளையில் ஈடுபட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்