கைது
போஸ்கோ 3 பேர்
கைது
வேலுார், ஜூன் 20–
வேலுார் மாவட்டம், கேவிகுப்பத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 52, விவசாயி. இவர் வீட்டிற்கு எதிரே உள்ள 30 வயது மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை சில நாட்களுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்தார். புகார்படி காட்பாடி மகளிர் போலீசார் போக்சோவில் கோவிந்தசாமியை இன்று கைது செய்து வேலுார் சிறையில் அடைத்தனர்.
* திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த பெண்டை கிராமத்தை சேர்ந்தவர் துரைமுருகன், 20. இவர் அதே பகுதியை சேர்ந்த 20 வயது இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். புகார்படி செய்யாறு மகளிர் போலீசார் போக்சோவில் துரைமுருகனை இன்று கைது செய்து வேலுார் சிறையில் அடைத்தனர்.
* திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த வில்வாரணி பகுதியை சேர்ந்தவர் கிரிதரன், 24. இவர் அதே பகுதியை சேர்ந்த 20 வயது பெண்ணை ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்ததால் அந்த பெண் 5 மாதம் கர்ப்பமானார். பிறகு பெண்ணை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்த வைத்தார். புகார்படி போளுர் மகளிர் போலீசார் கிரிதரனை போக்சோவில் இன்று கைது செய்து வேலுார் சிறையில் அடைத்தனர்.
Comments
Post a Comment