பேட்டி

வேலூர்   20-6-23


தென் மண்டல பிரத்யேக பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் சுற்றுலா சேவை வரும் 1 ஆம் தேதி முதல் துவங்குகிறது இதில் சுற்றுலா செல்ல விரும்பும் பயணிகள் கட்டணம் செலுத்தி முன் பதிவு செய்து 12 நாட்கள் பல மாநிலங்களுக்கு சுற்றுலா செல்லலாம் சுற்றுலா பிரிவு ரயில்வே பொது மேலாளர் ரவிகுமார் காட்பாடியில் பேட்டி 


வேலூர்மாவட்டம்,காட்பாடியில் உள்ள காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில்வேயின் சுற்றுலா பிரிவின் மேலாளர் ரவிகுமார் மற்றும் துணை மேலாளர் மாலதி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்  ஐ.ஆர்.சி.டிசியானது சுற்றுலாபயணிகளுக்கான பிரத்யேக பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது  இந்த ரயிலில் 3 குளிர்சாதன வசதிகொண்ட பெட்டியும் 8 ஸ்லீப்பர் கோச்சுகளும் 1 பேண்ட் ரி மற்றும் 2பவர் கார்கள் என மொத்தம் 14 பெட்டிகள் அடங்கும் இந்த ரயில் தென் மண்டலம் சார்பில் ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி யாத்திரை என்ற பெயரில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு இதன் சுற்றுலா சேவையானது வரும் 1 ஆம் தேதி  துவங்கி 12 நாட்கள் சுற்றுலா செல்கிறது இதில் ஒரே நேரத்தில் 750 பயணிகள் சுற்றுலா செல்ல மட்டும் பயணிக்கலாம் பொது பயணிகள் அனுமதியில்லை ரயில் கொச்சுவேலி,நாகர்கோவில்,திருநெல்வேலி விருந்துகள் மதுரை திருச்சி,தஞ்சாவூர்,மயிலாடுதுறை,சிதம்பரம்,விழுப்புரம் செங்கல்பட்டு மற்றும் சென்னை எழும்பூர் ஆகிய இடங்களிலும் பயணிகளை ஏற்றி செல்கிறது இதில் ஏசி கோஸ் கட்டணம் ஒரு நபருக்கு ரூ.40380 ஸ்லீப்பர் கோச் ரூ.22350 ஆன் லைன் மூலம் செலுத்தில் சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் முன்பதிவை செய்துகொள்ளலாம் இதில் செல்லும் பயணிகள் சுற்றுலாவுக்காக ஹைதராபாத்,ஆக்ரா,மதுரா,வைஷ்ணவ் தேவி,அமிர்தசரஸ்,புதுதில்லி ஆகிய இடங்களிலும் பார்வையிடலாம் என கூறினார்


Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்