விழா

வேலுார் பிராமணர் சங்கம்
சார்பில் பஞ்சாங்கம் படனம்



வேலுார், ஏப். 15–
வேலுார் பிராமணர் சங்கம் சார்பில் பஞ்சாங்கம் படனம் நிகழ்ச்சி பேரிப்பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று மாலை  நடந்தது. வேலுார்  கிளை பிராமணர் சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். துணை செயலாளர்  உமாபதி சிவம் வரவேற்றார்.
பஞ்சாங்கம் படன நிகழ்ச்சி குறித்து வேலுார் சரவண சாஸ்திரிகள் பேசுகையில், சோபகிருது வருட வாக்கிய பஞ்சாங்கத்தின் வெண்பா, பலன்,  கிரக நிலைகள், மகா சங்கராந்தி பலன்கள்,  ஆதார விரைய பலன்கள், நட்சத்திர கந்தாய பலன்கள், புண்ய தினங்கள், நவநாயகர்கள், கோசார பலன், நட்சத்திரம் மற்றும் அதன் அதிபதிகள், சூரியன், சந்திர கிரணங்கள் குறித்து விளக்கினார்.
வரும் 1 ம் தேதி வேலுார் சைதாப்பேட்டை சங்கர மடத்தில் கணேச சாஸ்திரிகள் தலைமையில் நடைபெற உள்ள  நித்ய ருத்ர பாராயணத்தில் வேலுார் பிராமணர் சங்க நிர்வாகிகள் பங்கேற்பது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சங்க ஆலோசகர்கள் சத்தியமூர்த்தி, பாலசுப்பிரமணியம், கிருஷ்ணமூர்த்தி, பொதுச் செயலாளர் சேகர், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் வெங்கட், செய்தி தொடர்பாளர் ராஜா, செயற்குழு உறுப்பினர்கள் ராஜகோபால், வசந்தா, அருணாசலம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்