கைது
12 கிலோ கஞ்சா கடத்த
முயன்ற வட மாநில வாலிபர்
கைது
வேலுார், ஏப். 16–
காட்பாடி ரயிலில் 12 கிலோ கஞ்சா கடத்த முயன்ற வட மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வேலுார் மாவட்டம் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் இன்று காட்பாடி ரயில்வே ஸ்டேஷனில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது ஹத்தியாவிலிருந்து யஸ்வந்த்பூர் செல்லும் ரயிலில் சந்தேகத்திற்கிடமாக இருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர், ஜார்க்கண்ட் மாநிலம், பத்ரா பகுதியை சேர்ந்த அஜித்குமார், 22, என்பதும், ஜார்க்கண்டிலிருந்து கர்நாடகா மாநிலம், பெங்களூருக்கு 12 கிலோ கஞ்சா கடத்த முயன்றதும் தெரியந்தது. அவரை கைது செய்த போலீசார் 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Comments
Post a Comment