ஆர்பாட்டம்
வேலூர் 19-4-23
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் 41 மாத பணி நீக்க காலத்தை பணிகாலமாக அறிவிக்க வேண்டும் இறந்த சாலை பணியாளர்கள் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் 7500 சாலை பணியாளர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டுமென தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் மாவட்டத்தலைவர் குமரவேல் தலைமையில் ஆர்பாட்டமானது நடைபெற்றது இதில் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும் இறந்த சாலை பணியாளர்கள் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்கிட வேண்டும் தர ஊதியம் 1900 ஆக உயர்த்தி அன்ஸ் கில்டு பணியாளராக அறிவித்திட வேண்டும் 7500 க்கு மேற்பட்ட சாலை பணியாளர்கள் காலிஇடங்களை நிரப்பி இளைஞர்களுக்கு வேலை வழங்கிட வேண்டும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்திட வேண்டும் அகவிலைப்படி நிலுவை சரண் விடுப்பு சம்பளங்கள் வழங்கிட வேண்டும்பொங்கல் போனஸ் ரூபாய் 10 ஆயிரம் வழங்கிட வேண்டும் வேலூர் கோட்டத்தில் 7 ஆண்டுகளாக நிரப்பாமல் உள்ள திறன்மிகு உதவியாளர் நிலை 2 உடனடியாக நிரப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் அலுவலக உதவியாளர் இரவு காவலர் பணியிடத்திற்கு சாலை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும் குடியாத்தம் வேலூர் உட்கோட்டங்களில் தளவாடப் பொருட்கள் ரெயின் கோட் இன்னும் வழங்கப்படாமல் உள்ளதை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி திரளான நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Comments
Post a Comment