பட்டமளிப்பு விழா
வேலூர்மாவட்டம். 19.6.2023
திருவள்ளூர் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா அரங்குக்கு அருகே திமுகவினர் குவிந்ததால் பரபரப்பு
இந்த விழாவில் இந்த தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான துரைமுருகன் பெயர் பங்கேற்கவில்லை என குற்றச்சாட்டு
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் 17வது பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநரும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான R.N .ரவி தலைமையில் நடைபெற்றது.
இதில் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர்,
வி.கே சிங்,
மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி,
பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் உள்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில்,
417 முனைவர் பட்டங்கள் பெற்றவர்கள் உள்பட
564 மாணவ மாணவியர்களுக்கு நோடியாக பட்டங்களை ஆளுநர் R.N.
ரவி வழங்கினார்.
மொத்தமாக
1, 13,275 மாணவ மாணவியர்கள்
பட்டங்களை பெற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் வி கே சிங்,
பட்டங்களை பெற்றுள்ள மாணவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.
கல்லூரி படிப்பை முடித்துள்ள நீங்கள் உலகில் பல சவால்களை எதிர்த்து போராட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
நம் நாட்டின் வளர்ச்சியின் பாதையில் மாணவர்களின் பங்கு அதிக அளவில் இருக்க வேண்டும்.
மாணவர்கள் தங்கள் இலக்கினை அடைய கடுமையான உழைப்பை பயன்படுத்த வேண்டும்.
தொழில் முனைவர்களாக மாறினால் தங்களின் வாழ்க்கை பிரகாசிக்கும்.
தொழில் முனைவோர்களாக போடும் இளைஞர்களுக்கு மத்திய அரசு பல்வேறு வகைகளில் உதவிகளை அளித்து வருகிறது அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மத்திய அரசு பெண்களின் கல்வி முன்னேற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.
நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களை
நம்பியுள்ளது.
இந்தியா மற்ற நாடுகளை விட சுய தொழில் துவங்குவதில் முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவில் 61 வகையான தொழில்களுக்கு
132 நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன.
இதனால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது
கொரானா காலத்திற்குப் பின்பு இந்தியாவின் பொருளாதாரம் 6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
எனவே மாணவர்கள் தங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
படித்த இளைஞர்கள் அனைவரும் அரசு வேலை நம்பி இருக்க வேண்டாம்.
ஒட்டு மொத்தமாக நான்கு சதவீதம் அளவிற்கு அரசு துறையில் வேலை வாய்ப்புகள் உள்ளது.
மீதமுள்ள 96 சதவீதம் தனியார் வேலை வாய்ப்புகள் உள்ளது.
2015 ஆம் ஆண்டில் இந்தியாவில் 428 சுயதொழில் நிறுவனங்களில் இருந்தன.
அதன் பிறகு மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையால்,
தற்பொழுது 80 ஆயிரம் சுய தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளது
எனவே இளைஞர்கள் சுயதொழில் துவங்க முன்வர வேண்டும் இதற்கு மத்திய அரசு தேவையான உதவிகளை
அளித்து வருவதாகவும் அமைச்சர் பேசினார்.
விழா ஆரம்பிப்பதற்கு முன்பாக
திருவள்ளூர் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா அரங்குக்கு அருகே திமுகவினர் குவிந்ததானர்
இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது உடனடியாக அவர்களிடம் சென்று பேச்சுவார்த்தையில் காவல்துறையினர் ஈடுபட்டனர்
அப்போது திமுகவினர்
இந்த விழாவில் இந்த தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான துரைமுருகன் பெயர் பங்கேற்கவில்லை என குற்றச்சாட்டினர்
மேலும் இது குறித்து கேட்க போவதாகவும் அதற்காக வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்
போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி பிரச்சனை குறித்து பின்னர் பேசிக் கொள்ளலாம் என கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்
Comments
Post a Comment