அவதி
ஏலகிரிமலையில்
அரசு பஸ் டயர் பஞ்சராகி
நின்றதால்
பயணிகள் அவதி
ஏலகிரிமலை, ஏப். 21–
ஏலகிரிமலைக்கு செல்லும் வழியில் அரசு பஸ் டயர் பஞ்சராகி நின்றதால் பயணிகள் நடந்தே மலைக்கு சென்றனர்.
ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏலகிரிமலை திருப்பத்துார் அருகே உள்ளது. சுற்றுலாதலமான இங்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இதற்காக திருப்பத்துாரிலிருந்து அரசு. தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இன்று காலை 9:00 மணிக்கு திருப்பத்துாரிலிருந்து ஏலகிரிமலை நிலாவூருக்கு அரசு டவுன் பஸ் சென்றது. இதில் 32 பயணிகள் இருந்தனர்.
ஏலகிரிமலைக்கு செல்லும் வழியில் 10 வது கொண்டை ஊசி வளைவில் சென்ற போது, டயர் பஞ்சராகி பஸ் நின்றது.
அந்த பஸ்சில் மாற்று டயர் இல்லை. டிரைவர் பாபு, 50, மொபைலின் தகவல் தெரிவித்ததன் பேரில், ஒரு மணி நேரம் கழித்து வந்த அரசு டவுன் பஸ்சில் மாற்று டயர் அனுப்பி வைக்கப்பட்டது. அதற்குள் பஸ்சில் வந்த பயணிகள் ஐந்து கி.மீ., துாரமுள்ள ஏலகிரிமலைக்கு நடந்தே சென்றனர். மலையில் பஸ் நின்றதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
ஏலகிரிமலைக்கு பழைய பஸ்கள் இயக்கப்படுவதால் அடிக்கடி பழுதடைகிறது. தற்போது கோடைவிடுமுறை விடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. எனவே புதிய பஸ்கள் அடிக்கடி இயக்க வேண்டும் என்பது சுற்றுலா பயணிகளிகள் எதிர்பார்க்கின்றனர்.
Comments
Post a Comment