விபத்து
கோதுமை ஏற்றிச்சென்ற
ரயில் தடம்புரண்டது
சோளிங்கர், ஏப். 22–
சோளிங்கர் அருகே, கோதுமை ஏற்றிச் சென்ற ரயிலின்
கார்டு பெட்டி தடம் புரண்டது.
சென்னையிலிருந்து கோவைக்கு 58 பெட்டிகளில் கோதுமை ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருகே மகேந்திரவாடி ரயில்வே ஸ்டேஷன் அருகே இன்று காலை 11:00 மணிக்கு சென்ற போது லுாப் லைனில் கார்டு பெட்டியின் நான்கு சக்கரங்களும் கீழே இறங்கி தடம் புரண்டது.
ஜோலார்பேட்டையிலிருந்து வந்த மீட்பு குழுவினர் நான்கு மணி நேரம் போராடி சரி செய்தனர். இது குறித்து அரக்கோணம் ரயில்வே அதிகாரிகளை கேட்டதற்கு, லுாப் லைனில் தடம் புரண்டதால் பயணிகள் ரயில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்று கூறினர்.
Comments
Post a Comment