வழக்கு
வேலுார் அரசு கூர்நோக்கு
பாதுகாப்பு இல்லத்தில்
12 சிறுவர்கள் மீது வழக்கு
வேலுார், ஏப். 16–
வேலுார் அரசு கூர்நோக்கு பாதுகாப்பு இல்லத்திலிருந்த 12 சிறுவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
வேலுார் மாவட்டம், வேலுார் அரசு கூர்நோக்கு பாதுகாப்பு இல்லத்திலிருந்து கடந்த 13 ல் இரவு 9:00 மணிக்கு ஐந்து சிறுவர்கள் சுவர் ஏறி குதித்து தப்பியோடினர். இரண்டு மணி நேரத்தில் போலீசார் பிடித்து இல்லத்தில் அடைத்தனர். அப்போது இல்லத்திலிருந்த ஏழு சிறுவர்கள் கட்டடத்தின் மேலே ஏறி ரகளையில் ஈடுபட்டனர். பாதுகாப்பு இல்ல கண்காணிப்பாளர் விஜயகுமார் கொடுத்த புகார்படி வேலுார் வடக்கு போலீசார் அவர்கள் மீது இன்று வழக்கு பதிவு செய்தனர்.
Comments
Post a Comment