சஸ்பெண்ட்
ரூ 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய
அதிகாரி சஸ்பெண்ட்
வேலுார், ஏப். 21–
வேலுாரில், தனியார் நர்சிங் கல்லுாரி முதல்வரிடம் ரூ 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேலுார் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
வேலுார் மாவட்டம், தொரப்பாடியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 58. இவர் அணைக்கட்டு வட்டார மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். தற்போது இவர் வேலுார் மாவட்டத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லுாரியில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் பயிற்சி பெற சுகாதார சான்று வழங்கும் பணியை கூடுதலாக கவனித்து வந்தார்.
வேலுார் பில்டெர் பெட் சாலையில் உள்ள பி.பி.ஆர்., என்ற தனியார் மருத்துவமனை மற்றும் நர்சிங் கல்லுாரியில் படிக்கும் மாணவிகள் இரண்டு மாதம், அரசு மருத்துவமனைகளில் பயிற்சி பெற வேண்டும். இதற்கு அனுமதி சான்றிதழ் பெற அவரை கல்லுாரி முதல்வ்ர சகுந்தலா அணுகினார். அதற்கு அவர் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சகுந்தலா வேலுார் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் ஏற்பாட்டின்படி, கல்லுாரிக்கு நேரில் வந்து பணத்தை பெற்றுக்கொள்ளும்படி சகுந்தலா கூறியுள்ளார். அதன்படி நேற்று மாலை 4:00 மணிக்கு கல்லுாரிக்கு வந்த கிருஷ்ண மூர்த்தி, போலீசார் கொடுத்தனுப்பிய ரசாயனம் தடவிய, 10 ஆயிரம் ரூபாயை கல்லுாரி முதல்வர் சகுந்தலாவிடம் பெற்றபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக அவரை கைது செய்து வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர்.
கைதான கிருஷ்ணமூர்த்தியை, மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் பானுமதி இன்று சஸ்பெண்ட் செய்தார்.
கர்ப்பப்பையில் உள்ள நீர் கட்டியை சரி செய்ய மீண்டும் வராமல் இருக்க டாக்டர் விஜய் கூறியதாவது:
1. வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊற வைத்து தினமும் காலை, மதியம், இரவு என 3 வேளை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும்.
2. இலவங்கப்பட்டையை பொடியாக அரைதஅது தேனில் கலந்து சாப்பிடலாம். பால் அல்லது தயரில் கலந்தும் சாப்பிடலாம். கேக், டிஸ்கெட் சாப்பிடும் போது அதில் சேர்த்துக்கொண்டு சாப்பிடலாம்
3. தினமும் காலை வெறும் வயிற்றில் துளசி இலையை சாப்பிடலாம்.
4. தினமும் குடிக்கும் காபி, டீ போன்றவற்றில் கிரின் டீ சாப்பிடலாம். இதில் சர்க்கரைக்கு பதில் தேனை ஊற்றி சாப்பிடலாம்
இதனால் இந்த பிரச்சனை குறையும். உடல் எடை குறையும். சர்க்கரை நோய் வராது.
Comments
Post a Comment