கைது
வேலூர் 19-4-23
செவிலியர் கல்லூரியில் அரசு மருத்துவமனைகளில் பயிற்சி பெற சான்றிற்காக ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட வட்டார சுகாதாரமேற்பார்வையாளர் கைது
____________________
வேலூர்மாவட்டம்,பில்டர் பெட் சாலையில் தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது இதில் பயிலும் செவிலியர் மாணவிகள் 2மாதகாலம் அரசு மருத்துவமனைகளில் நேரடி பயிற்சியை எடுக்க வேண்டும் இந்த பயிற்சிக்காக சான்றுகள் தேவை என கல்லூரியின் முதல்வர் சகுந்தலா வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் சான்றுக்கு அனுகியுள்ளார் இதில் கிருஷ்ணமூர்த்தி தனக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் அளித்தால் முடித்து தருவதாக கேட்டுள்ளார் இதில் ஒப்புகொண்ட முதல்வர் கல்லூரிக்கு நேரடியாக வந்து பணத்தை பெற்றுகொள்ளுமாறு கூறி அழைத்துள்ளார் இதனால் சகுந்தலா வேலூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் முன்னதாக புகார் அளித்திருந்தார் கல்லூரிக்கு சென்று கிருஷ்ணமூர்த்தி ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கிருஷ்ணமூர்த்தியை கையும் களவுமாக கைது செய்தனர் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்
Comments
Post a Comment