பறிமுதல்
பெங்களூருக்கு கடத்த முயன்ற
ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
குடியாத்தம், ஏப். 22–
குடியாத்தம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து பெங்களூருக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசியை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் வருவாய்த்துறையினர் இன்று ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அதில், குடியாத்தம் ரயில்வே ஸ்டேஷன் முதலாவது பிளாட்பாரத்தில் மறைத்து வைத்திருந்த ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். விசாரணையில், குடியாத்தத்திலிருந்து, கர்நாடகா மாநிலம், பெங்களூருக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. ரேஷன் அரிசி கடத்த முயன்றவர்கள் குறித்து வருவாய்த்துறையினர் விசாரிக்கின்றனர்.
Comments
Post a Comment