தானம்

ரத்தம் கேட்டு வந்த
நோயாளிக்கு ரத்த  தானம்
செய்த ஆயுதப்படை போலீசார்



வேலுார், ஏப். 16–
ரத்தம் கேட்டு வந்த நோயாளிக்கு ரத்த  தானம் செய்த ஆயுதப்படை போலீசாரை மக்கள் பாராட்டினர்.
மேற்கு  வங்க மாநிலத்தை சேர்ந்தவர் சுமிதா மோண்டல், 67.  இவர் வேலுார் சி.எம்.சி., மருத்துவமனையில் பித்தநாள நோய்க்கு கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்தார். அடுத்த வாரம் அவருக்கு அறுவை சிகிச்சை நடக்க உள்ளது. அதற்கு இரண்டு யூனிட் ரத்தம் தேவைப்படுவதால் ஏற்பாடுகள் செய்யும்படி மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பலரிடம் கேட்டும் ரத்தம் கிடைக்கவில்லை.
இதனால் கடந்த 13 ம் தேதி வேலுார் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்து தங்கள் நிலை குறித்து தெரிவித்தனர். விருப்பப்பட்டவர்கள் ரத்ததானம் செய்யலாம் என எஸ்.பி., ராஜேஷ் கண்ணன் அறிவித்தார். இதையடுத்து ஆயுதப்படையில் பணியாற்றி வரும் போலீசார் நரேந்திரன், பத்மநாபன் ஆகியோர் சம்மதம் தெரிவித்து இன்று ரத்ததானம் செய்தனர். இவர்களுக்கு போலீசார், மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்