கைது
8 வயது சிறுமியை சில்மிஷம்
செய்த முதியவர் கைது
ஜோலார்பேட்டை, ஏப். 22–
ஜோலார்பேட்டை வழியாக சென்ற ரயிலில் பயணம் செய்த எட்டு வயது சிறுமியை சில்மிஷம் செய்த 64 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.
மும்பையை சேர்ந்த ஒருவர் தனது எட்டு வயது மகளுடன் கேரளா மாநிலம், திருவனந்தபுரம் செல்ல மும்பையிலிருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்த பெட்டியில் பயணம் செய்தார்.
இந்த ரயில் திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே இன்று அதிகாலை சென்றது. அப்போது அதே பெட்டியில் பயணம் செய்த வேலுார் மாவட்டம், காட்பாடி காந்திநகரை சேர்ந்த பாபு, 64, என்பவர் சிறுமியை பாலியல் சில்மிஷம் செய்தார். புகார்படி ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் பாபுவை கைது செய்து வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர்.
Comments
Post a Comment