முகாம்
பழைய தங்கத்தை மாற்றிக்
கொள்ள எக்சேஞ்ச் பாலிசி
திட்டம் அறிமுகம்
வேலுார், ஜூன்
வேலுார் மாவட்டம், வேலுார் அண்ணாசாலையில் டாடா நிறுவனத்தின் தனிஷ்க் நகைக்கடை உள்ளது. டைட்டான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அஜாய் சாவ்லா இங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையில், தனிஷ்க் நகைக்கடையில் கோல்ட் எக்சேஞ்ச் பாலிசி திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் வாடிக்கையாளர்கள் தங்களிடமுள்ள பழைய நகைகளை மாற்றிக்கொண்டு புதிய டிசைனில் நகைகள் வாங்குவதன் மூலம் அதன் மதிப்பு அதிகரிக்கும். இதற்காக 20 காரட் பழைய நகைளை மாற்றினால் தங்கத்தின் மீது 100 சதவிதம் பரிமாற்ற மதிப்பு வழங்கப்படுகிறது.
இந்தியா முழுவதும் 2 மில்லியன் வாடிக்கையாளர்கள் 100 டன் பழைய தங்கத்தை இதுவரை மாற்றிக்கொண்டுள்ளனர். எந்த நகைககடையில் வாங்கப்பட்ட பழைய நகைகளும் ஏற்றுக்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Post a Comment