இலவசம்
வேலூர் 21-4-23
வேலூரில் கோடை காலத்தில் வித்தியாசமான முறையில் சித்த மருத்துவ பானங்கள் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்குதல் துவக்கம்
_________________________________
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் நீதிமன்ற வளாகம் அருகில் புற்று மகரிஷி சமூக மருத்துவ மையத்தின் மூலம் வேலூரில் கடும் வெய்யிலின் தாக்கம் உள்ளது இதனை பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் கோடை கால சித்த மருத்துவ பானங்கள் ஊறல் நீர்கள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் மூலிகை குடில் அமைத்து இம்காப்ஸ் இயக்குநர் டாக்டர் பாஸ்கரன் தலைமையில் இன்று முதல் 15 நாட்களுக்கு பொதுமக்களுக்கு நன்னாரி ஊறல் நீர் வெட்டிவேர் ஊறல் நீர் சோற்று கற்றாழை சாறு,சீரக தண்ணீர் மோர் ஆகிய ஐந்து வகையான மூலிகை பானங்கள் பானைகளில் வைக்கப்பட்டு இலவசமாக 15 நாட்களுக்கு பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை வேலூர் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் வெங்கடபிரகாசம் துவங்கி வைத்தார் இதில் பாண்டிசேரி மத்திய மக்கள் தொடர்பக துணை இயக்குநர் சிவக்குமார் மருத்துவர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் பொதுமக்கள் வித்தியாசமாக உள்ள சித்த மருத்துவ பானங்களை ஆர்வமுடன் வந்து வாங்கி பருகினார்கள் வேலூர் என்றாலே வெய்யிலூர் என்ற பெயர் உள்ள நிலையில் சித்த மருத்துவர் ஒருவர் இது போன்ற மூலிகை குடிநீரை பொதுமக்களுக்கு இலவசமாக வெப்பத்தை தனிக்கும் வகையில் வழங்குவது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது
Comments
Post a Comment