கைது

திருப்பத்தூர்மாவட்டம்   வேலூர்   19-4-23

 திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏழு போலி மருத்துவர்கள் கைது!  போலீசார் அதிரடி நடவடிக்கை

திருப்பத்தூர் மாவட்டத்தில் மருத்துவம் படிக்காமல் போலியாக மருத்துவம் பார்த்து வருவதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் போலி மருத்துவர்கள் பிடிக்க அனைத்து காவல் நிலைய போலீசாருக்கு உத்தரவிட்டார்.அதன் காரணமாக காவல்துறையினர் மற்றும் மருத்துவர்கள் அடங்கிய தனி படையினர் இணைந்து மாவட்டம் முழுவதிலும் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் கந்திலி காவல் நிலையத்தில் வேலு,ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில்  மனோரஞ்சிதம், குருசிலாப்பட்டு காவல் நிலையத்தில் பழனி, நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் அருண், ஆலங்காயம் காவல் நிலையத்தில் தனபால், உமராபாத் காவல் நிலையத்தில் இம்மானுவேல் மற்றும் ஜெயபால் ஆகிய 7 போலி மருத்துவர்கள் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்

 மேலும் மருத்துவம் பார்க்க வைத்திருந்த மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்