கைது

காட்பாடியில்
போலி ஆவணங்கள் கொடுத்து
ரூ 17 லட்சம் மோசடி  செய்த
தம்பதி கைது




வேலுார், ஏப். 15–
காட்பாடியில், போலி ஆவணங்கள் கொடுத்து வங்கியில் 17 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது  செய்தனர்.
வேலுார் மாவட்டம், காட்பாடியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 51. இவர் மனைவி பேபி, 50. இவர்கள்  காய்டெக் என்ற நிறுவனம் நடத்தி  டிஜிடல் பேனர் கடை நடத்தி வந்தனர். தொழிலை  அபிவிருத்தி   செய்வதற்காக 2015 ம் ஆண்டு காட்பாடி மிஷன் சர்ச் பகுதியில் அவர்கள் பெயரில் இருந்த 900 ச. அடி கொண்ட கட்டடம் மற்றும் நிலத்தை காட்பாடியில் உள்ள கனரா வங்கியில் அடமானம் வைத்து 17 லட்சம் ரூபாய் கடன் பெற்றனர்.
அவர்கள் வட்டி, அசலை செலுத்தவில்லை. இதனால் 2022 ம் ஆண்டு அசலும், வட்டியும் சேர்ந்து 37 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டுமென வங்கி சார்பில் தம்பதிக்கு  நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு அவர்கள் பதில் அனுப்பாததால், இவர்களின் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டது. அதனை காதர் அலி என்பவர் 19 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார்.
அந்த இடத்தை அவர் தனது பெயரில் மாற்ற முயற்ச்சி செய்தார். அப்போது, அந்த இடம் 2009 ம் ஆண்டு வேறு ஒருவர் பெயருக்கு தான செட்டில்மண்ட் செய்யப்பட்டு  மாற்றப்பட்டிருப்பது   தெரியவந்தது.
இது குறித்து காதர் அலி காட்பாடியில் உள்ள கனரா வங்கி மண்டல மேலாளர் அலுவலகத்தில் புகார்  செய்தார். மண்டல மேலாளர் அலுவலக அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ரவிச்சந்திரன் பழைய சொத்து பத்திரங்கள் கொடுத்து  ஏமாற்றி கடன் வாங்கியது தெரியவந்தது.  கனரா வங்கி மண்டல மேலாளர் மாதவராவ் வேலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார்  செய்தார். போலீசார் வழக்கு பதிவு  செய்து ரவிச்சந்திரன், பேபி தம்பதியை நேற்று  இரவு கைது செய்தனர்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்