கண்டனம்

முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த
தீர்மானம் இந்து ஆதிதிராவிட மக்களுக்கு
எதிரானது
விஜய பாரத மக்கள் கட்சி எதிர்ப்பு


வேலுார், ஏப். 21–
முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த இடஒதுக்கீடு தீர்மானம் இந்து ஆதிதிராவிட மக்களுக்கு
எதிரானது என விஜய பாரத மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து விஜய பாரத மக்கள் கட்சி நிறுவனர் ஆம்பூர் ஜெய்சங்கர் விடுத்த அறிக்கை:  கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு  வழங்க வேண்டும் என, மத்திய அரசை வலியுறுத்தி, முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம் சட்டசபையில்  நிறைவேற்றப்பட்டது. ஒரு கண் புடைப்பு ஏமாற்று வேலை.
இந்து சனாதன  தர்மத்தில் ஜாதி பாகுபாடுகள் உள்ளன. ஆகையால் சிலர் கிறிஸ்துவர்களாக மதம் மாறிவிட்டனர்.  அப்படி மதம் மாறியவர்கள் பிற்படுத்தப்பட்டோர்  பி.சி., பட்டியலில் சேர்க்கப்பட்டு சலுகையை அனுபவித்து வருகிறார்கள். ஒரு சிலர் அரசை ஏமாற்றி கிறிஸ்துவத்திற்கு துரோகம் செய்து எஸ்.சி.,  எஸ்.டி., பட்டியலில் தொடர்கின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில், சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் அம்பேத்கார் உருவாக்கிய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது.
ஒருவர் இந்துவாக இருக்கும் வரை அவர் எஸ்.சி., எஸ்.டி., பட்டியலில் தொடரவும், அதற்கான சலுகைகளை அனுபவிக்க முடியும். பொளத்தம், சணமம், சீக்கியம் ஆகியவை இந்து மதத்தின் உட்பிரிவுகள் என்றும் அரசியல் அமைப்பு சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. எனவே இந்த  தீர்மானம் அம்பேத்கார் நோக்கங்களுக்கு துரோகம் இழைக்கும் தீர்மானம். இது கண்டிப்பாக நடக்காது என தெரிந்தும், கிறிஸ்தவர்களை ஏமாற்றுவதற்காகவும், வரும் எம்.பி., தேர்தலுக்காகவும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்