பேட்டி
வேலூர் 21-4-23
தமிழகத்தில் உள்ள கூர்நோக்கு இல்லங்களில் சிறார்கள் அடிக்கடி தப்பி செல்வது குறித்து காரணங்களை ஆய்வு செய்ய தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் வேலூரில் சிறார்கள் இல்லத்தில் ஆய்வு 30 சிறுவர்களுக்கு ஒரு ஆலோசகர்களை நியமிக்க ஆணையம் டெல்லியில் பரிந்துரை செய்வோம் பேட்டி
___________________________________________
வேலூர்மாவட்டம்,வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள இளம் குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள சிறார் பாதுகாப்பு இல்லத்தை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் நேரில் ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் அதிகாரிகளுடன் இல்லத்தில் ஆய்வு செய்து இளம் சிறார்களிடமும் அங்குள்ள குறைகள் குறித்து கேட்டறிந்தார்
பின்னர் டாக்டர் ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழகத்தில் உள்ள கூர்நோக்கு இல்லங்களில் காஞ்சிபுரம் வேலூர் உள்ளிட்ட அரசினர் பாதுகாப்பு இல்லங்களில் சிறார்கள் தப்பி செல்கின்றனர் இதுகுறித்து குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையர் என்ற முறையில் ஆய்வு செய்தேன் சிறார்களிடமும் பேசியுள்ளோம் இதில் மாணவர்களுக்கு தப்பி செல்லாமல் இருக்க வேலூரில் பாதுகாப்பு இல்ல சுற்றுசுவர் உயரங்கள் உயர்த்தப்பட்டுள்ளது சிறுவர்கள் தப்பி செல்வது சில காரணங்கள் உள்ளன இன்னும் தப்பி சென்ற ஒரு சிறுவர் பிடிபட வேண்டியுள்ளது மேலும் ஆணையம் 30 சிறார்களுக்கு ஒரு ஆலோசகர் என்ற அடிப்படையில் கூர் நோக்கு இல்லத்தில் நியமனம் செய்ய வேண்டுமென டெல்லியில் பரிந்துரை அளிப்போம் என்று கூறினார்
Comments
Post a Comment