அஞ்சலி
வேலூர் 10-7-23
வேலூரில் 217 ஆவது சிப்பாய் புரட்சி நினைவுதினத்தில் சிப்பாய் நினைவு தூணுக்கு நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி
________________
வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டை அருகில் உள்ள சிப்பாய் புரட்சியின் 217 ஆவது ஆண்டை முன்னிட்டு சிப்பாய் புரட்சி நினைவுதூண் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மலர் தூவி மலர் வளையம் வைத்து காவலர்களின் இசையுடன் அஞ்சலியை செலுத்தினார்கள் 1806 ஆம் ஆண்டு ஜுலை 10 ஆம் நாள் சிப்பாய் புரட்சி ஏற்பட்டது அப்போதைய ஆங்கில அரசின் மதராஸ் படையின் முதன்மை தளபதி சர் ஜான் கிரேடக் என்பவன் பல புதிய விதிமுறைகளை புகுத்தினான் இந்துக்கள் கடுக்கன் அணிய கூடாது நெற்றியில் சமய சின்னங்களை அணிய கூடாது இஸ்லாமியர்கள் தாடி அகற்றி மீசை வைத்து கொள்ள வேண்டும் பசுதோலால் ஆன சுங்கு தொங்கும் குல்லா அணிய வேண்டும் சிலுவை போன்ற சின்னத்தை மார்பில் அணிய வேண்டும் என கூறியதால் இதனை ஏற்காத இந்திய சிப்பாய்கள் 1806 ஆம் ஆண்டு ஜுலை 10 ஆம் நாள் விடியற்காலை 4 மணிக்கு கோட்டையில் புரட்சி செய்து ஆங்கிலேயே அதிகாரிகளையும் வீரர்கள் சிலரையும் கொன்றனர் கோட்டையில் பறந்த ஆங்கில அரசின் யூனியன் கொடியை இறக்கிவிட்டு திப்புவின் புலிக்கொடியை ஏற்றினார்கள் இதனால் ஆத்திரமடைந்த ஆங்கில அரசு ராணிப்பேட்டையில் இருந்து காலப்பர் துப்பாக்கி படைகளை கொண்டு வந்து கோட்டையினுள்ளே புகுந்து இந்திய ராணுவ வீரர்கள் 800-க்கும் மேற்பட்டோரை சுட்டுகொன்றனர் இது தான் இந்தியாவின் முதல் சுதந்திர போருக்கு விதித்திட்ட புரட்சியாகும் இதில் இறந்த ராணுவ வீரர்களுக்கு ஆண்டுதோறும் சிப்பாய் புரட்சி நினைவு தினத்தில் முன்னாள் படைவீரர்கள் காவல்துறையினர் பொதுமக்கள் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள்
சிப்பாய் புரட்சியின் நினைவு தினமான நினைவுதூண் கலைஞர் கருணாநிதி தமிழக முதல்வராக இருந்த போது திறந்து வைக்கப்பட்டதுஎன்பது குறிப்பிடத்தக்கது இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன் நந்தகுமார்,மேயர் சுஜாதா டி.ஐஜி முத்துசாமி,காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள்
Comments
Post a Comment