பீதி
சாலையில் சுற்றித்திரியும்
ஒற்றை கொம்பன் யானையால்
மக்கள் பீதி
ஆம்பூர், ஜூலை 11–
கடந்த சில நாட்களாக ஒற்றை கொம்பன் யானை திருப்பத்துார் மாவட்டம், ஜமுனாமரத்துார், காவலுார், வெள்ளக்குட்டை, வாணியம்பாடி பகுதிகளில் சுற்றிக்கொண்டிருந்தது. இன்று இந்த யானை ஆங்காயம் வனப்பகுதி வழியாக ஆம்பூர் அருகே பனங்காட்டேரி பகுதிக்கு வந்து சாலையில் சுற்றிக்கொண்டுள்ளது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்லாமல் சாலையில் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
இந்த யானை அப்பகுதியில் விளைந்துள்ள மாமரத்திலிருந்து மாங்காய் சாப்பிட்டு விட்டு ஜாலியாக சுற்றிக் கொண்டுள்ளது. தகவல் அறிந்த ஆலங்காயம் வனத்துறையினர் இந்த யானையை விரட்டினர். ஆனால் வனப்பகுதிக்குள் சென்ற யானை வனத்துறையினர் சென்றதும் மீண்டும் ஊருக்குள் புகுந்த மாங்காய்கள் தின்று வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இரவில் துாக்கத்தை இழந்தனர். மேலும் ஒன்றை யானையை படம் எடுக்கவோ, செல்பி எடுக்க கூடாது என வனத்துறையினர் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Comments
Post a Comment