கைது
6 கிலோ கஞ்சா
கடத்த முயன்ற
2 பேர் கைது
வேலுார், ஜூலை 11–
வேலுார் மாவட்ட மது விலக்கு போலீசார் இன்று காட்பாடி ரயில்வே ஸ்டேஷனில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 வது பிளாட்பாரத்தில் சந்தேகத்திற்கிடமாக உட்கார்ந்திருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டம், கவுட கொத்தா தாலுகா பலிநாலா கிராமத்தை சேர்ந்த அனில் பஸ்டாராய், 28, அக்ஷய்மார், 33, என்பதும், ஒடிசாவிலிந்து வேலுாருக்க 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 6 கிலோ கஞ்சா கடத்த முயன்றது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Comments
Post a Comment