டாக்டர் பேட்டி

தற்போது உலகத்தில்
53 கோடி மக்கள்
சர்க்கரை நோயால்
பாதிக்கப்பட்டுள்ளனர்
சிஎம்சி  டாக்டர்  தகவல்


வேலுார், ஜூன் 30–
வேலுார் சிஎம்சி மருத்துவமனை நீரழிவு நோய் சிகிச்சை பிரிவு தலைமை சிறப்பு மருத்துவர் டாக்டர் நிஹால் தாமஸ் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
தற்போது உலகத்தில் 53 கோடி மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும்  25 ஆண்டுகளில்  இது 130 கோடியாக உயரும்.
சிறுவர்களுக்கு வரும்  டைப் 1 சர்க்கரை நோயில் அவர்கள் தினமும் இன்சுலின் ஊசி போட்டுக் கொண்டே ஆக வேண்டும். இவர்களின் ஆயுள் காலம் 13 ஆண்டுகளாக இருக்கும்.
ஆனால் பெரியவர்களுக்கு டைப் 2 எனப்படும் சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
உணவு முறை, வாழ்க்கை பழக்க வழக்கம், உடல் பயிற்சிகள் செய்யாதது, மாசு கட்டுப்பாட்டு பாதிப்பு,  புகை பிடிப்பது, விறகு அடிப்பு பயன்படுத்தி சமைப்பதால் ஏற்படும் புகை, குடி பழக்கம், அதிக உடல் எடை, அதிக உஷ்ணத்தில் வேலை செய்வது, அதிகளவு அரிசி சாதம் சாப்பிடுவது  என 14 காரணங்களால் டைப் 2 சர்க்கரை நோய் பெரியவர்களுக்கு வருகிறது.
சர்க்கரை நோய் வராமல் இருக்க  காய்கறி, பழங்களை தினசரி உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். அரிசி சாதம் சாப்பிடுவதை  குறைக்க வேண்டும். தானியங்கள், ராகி அதிகளவு சாப்பிட வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் ஏழை மக்களுக்கு தானியங்கள் மற்றும் ராகி ஆகிவயற்றை இலவசமாக வழங்கினால் அவர்கள் சாப்பிடுவதன் மூலம் கிராமப்பகுதி மக்களுக்கு சர்க்கரை நோயிலிந்து தப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்