கூட்டம்

*நெமிலி ஊராட்சி ஒன்றியம்!*
*ஒன்றியக்குழு கூட்டம்!!*

நெமிலி ஒன்றிய *பெருந்தலைவர் பெ.வடிவேலு* அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கீழ்கண்ட பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டன!...

1) *"முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம்"* மூலம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட *கிராம சாலைகளை மேம்பாடு செய்வதற்காக ரூ.10 கோடி* நிதி ஒதுக்கீடு செய்த *மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்* அவர்களுக்கும், *மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அண்ணன், ஆர்.காந்தி அவர்களுக்கும் நன்றி!* தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!...

2) நெமிலி to அரக்கோணம் செல்லும் சாலையில் உள்ள *கல்லாறு பாலம்* மற்றும் நெமிலி to சேந்தமங்கலம் செல்லும் சாலையில் உள்ள *குசஸ்தலை ஆற்றுப்பாலம்* ஆகிய இரண்டு பாலங்களும் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை, எனவே இவ்விரு பாலங்கள் மிகவும் பழுதடைந்து அபாயகரமான சூழ்நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் ஆற்றுநீர் பாலத்திற்கு மேல் செல்லும்போது பொதுமக்கள் சுமார் 20 கிலோ மீட்டர் சுற்றிச் செல்லும் ஆபத்தான சூழ்நிலை உள்ளது. எனவே *இவ்விரு பாலங்களையும் அகற்றிவிட்டு புதியதாக மேம்பாலங்கள் அமைக்கப்பட வேண்டுமென நெடுஞ்சாலை துறையிடம் வலியுறுத்த* இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது!...

3) நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், *"கலைஞர் நூற்றாண்டு விழா பூங்கா"* அமைத்திட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது!...

4) நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் 12 கிராமங்களில் சுகாதார நிலைய கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளன. அவற்றை இடித்து அப்புறப்படுத்திவிட்டு *புதியதாக சுகாதார நிலைய கட்டிடங்கள்* கட்டித்தர, சுகாதார துறையிடம் கோருவதென தீர்மானிக்கப்பட்டது!...

5) நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் நுழைவுப் பகுதியில், *"கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மார்பளவு திருவுருவச் சிலை"* அமைப்பதென முடிவெடுக்கப்பட்டது!...

6) கிராமப்புறங்களில் பராமரிப்பின்றி உள்ள *பழமையான, புராதான கோயில்களை மேம்பாடு செய்து, இந்து சமய அறநிலைத்துறை மூலம் பராமரிப்பு* பணிகள் மேற்கொள்ள கோருவதென கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது!...

7) நெமிலி பேரூராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம ஊராட்சிகளில், சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் நிலத்தடி நீர் மிகவும் பாதிப்படைந்து குடிநீர் மாசடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர், எனவே நெமிலி வழியாக செல்கின்ற *ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட பைப்லைன் மூலம், நெமிலி பேரூராட்சி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய,* தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் கோருவதென இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது!...

8) *புன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுக்கா அரசு பொது மருத்துவமனையாக தரம் உயர்த்திடவும்,* நெமிலி தலைமையிடமாக கொண்டு தாலுகாவாக அறிவிக்கப்பட்ட பின்னர், * நெமிலி பேரூராட்சி பகுதியில் தீயணைப்பு நிலையம், மகளிர் காவல் நிலையம், கருவூலம், பாரத ஸ்டேட் பாங்க்* போன்றவை அமைக்கப்பட வேண்டுமென இக்கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!...

9) *மகேந்திர வர்மனால் கட்டப்பட்ட, மகேந்திரவாடி கிராமத்தில் உள்ள, ஒரே கல்லாலான குடைவரைக் கோயில் பகுதியை மேம்பாடு செய்து, நமது இராணிப்பேட்டை மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத்தலமாக உருவாக்க* உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது!...

இது போன்று பல்வேறு தீர்மானங்கள் ஒன்றியக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன!...

இக்கூட்டத்தில், நெமிலி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் திரு.ச.தீனதயாளன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊ.ஒ) திரு.சிவராமன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், வேளாண்மை துறை, கல்வித்துறை, சுகாதாரத்துறை, மின்சார துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்!...

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்