கோரிக்கை
நாள்..10.07.2023
*எமிஸ் உள்ளிட்ட கற்றல் கற்பித்தல் சாராத பணிகளை ஆசிரியர்கள் மீது திணிப்பை நிறுத்திட வேண்டும்*
*இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு
தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை*
&&&&&&&&
கற்றல் - கற்பித்தல் சாராத பணிகளை நிறுத்திடவும், எமிஸ் தொடர்பான பணிகள், அளவுக்கு அதிகமான தேவையற்ற பதிவேடுகள் பராமரிப்பதை நிறுத்திட வேண்டுமெனவும் தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறத் தகுதித் தேர்வு தேவையில்லை என்பதைத் தமிழ்நாடு அரசு கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசுக்கு இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இது குறித்து இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், மாநில ஒருங்கிணைப்பாளர் ச.மயில் ஆகியோர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது..
இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகத்தில் அகில இந்தியச் செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச்செயலாளருமாகிய சே.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.
அகில இந்தியச் செயலாளரும், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளருமாகிய அ.சங்கர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் திருவனந்தபுரத்தில் மே 10,11 ஆகிய தேதிகளில் நடைபெற்ற STFIன் அகில இந்தியப் பொதுக்குழுக்கூட்ட முடிவுகள் குறித்தும், அதைத் தமிழ்நாட்டில் செயல்படுத்துவது குறித்தும் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளருமாகிய ச.மயில் விளக்கிப் பேசினார்.
இக்கூட்டத்தில் அகில இந்திய செயற்குழு உறுப்பினர்களான தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் செ.நா.ஜனார்த்தனன், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனத் தலைவர் அ.மாயவன்,Ex:MLC, தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர், அலுவலர் கூட்டமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் சிவஸ்ரீ ரமேஷ், தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் மாநில தலைவர் த. உதயசூரியன், ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
மேலும், இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் இரா.பெருமாள்சாமி, மாநிலப்பொருளாளர் பொ.அன்பழகன் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தின் சார்பில் மாநில நிர்வாகி குலாம், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் பக்தவச்சலம், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில பொருளாளர் க.சு.பிரகாசம், தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பின் மாநிலப் பொருளாளர் தயாளன் ஆகியோரும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
1. அகில இந்தியப் பொதுக்குழு முடிவின்படி தென் மண்டல அளவில் இயக்கப் பயிலரங்கை(Study camp)2023 ஆகஸ்ட் 4,5,6 தேதிகளில் சென்னையில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
2. இயக்க பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளராக சே.பிரபாகரன் இணை ஒருங்கிணைப்பாளராக க. சத்தியநாதன், நிதிக்காப்பளராக பக்தவச்சலம், அகில இந்திய செயற்குழு உறுப்பினர்களை உள்ளடக்கிய பணிக்குழுவை அமைத்திட ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
3. தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உரிய நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்திட வேண்டுமென இம்மாநிலக்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
4. தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறத் தகுதித் தேர்வு தேவையில்லை என்பதைத் தமிழ்நாடு அரசு கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டுமென இம்மாநிலக்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
5. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் காலைச் சிற்றுண்டித் திட்டம், உயர்கல்வியில் 7.5 சதவீத தனி இட ஒதுக்கீடு, புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டுமென இம்மாநிலக்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
6.தமிழ்நாட்டில் ஆரம்பப்பள்ளிகள் முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் பணியைப் பாதிக்கும் வகையிலும், ஆசிரியர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலும், ஆசிரியர்களுக்கு நாள்தோறும் வழங்கப்பட்டு வரும் எமிஸ் தொடர்பான பணிகள்,கற்பித்தல் சாராத பணிகளை நிறுத்திடவும், அளவுக்கு அதிகமான தேவையற்ற பதிவேடுகள் பராமரிப்பதை நிறுத்திடவும் பள்ளிக்கல்வித்துறை உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இம்மாநிலக்குழு பள்ளிக்கல்வித்துறையை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
7. மேற்கண்டவாறு நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் 2,3,4,5 ஆகியவற்றில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள கோரிக்கைகள் உள்ளிட்ட ஆசிரியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றாத நிலையில் தமிழ்நாடு STFI சார்பில் விரைவில் மாநிலம் முழுவதும் போராட்டக் களம் காண்பதெனவும் இம்மாநிலக்குழு ஏக மனதாகத் தீர்மானிக்கிறது.
8. புதிய ஓய்வூதிய திட்டம் மற்றும் புதிய கல்விக்கொள்கை 2020 ஆகியவற்றை எதிர்த்து அகில இந்தியப் பொதுக்குழு எடுத்துள்ள முடிவின்படி 2023 ஜூலை மாதத்தில் வட்டார,மாவட்ட அளவில் பிரச்சார இயக்கம் நடத்துவது.
9. 2023 அக்டோபர் மாதத்தில் மாநில அளவில் மிகப்பெரிய அளவில் போராட்ட நடவடிக்கை மேற்கொள்வதெனவும், 03.11.2023 அன்று புதுதில்லியில் அகில இந்திய அளவிலான ஆசிரியர் கூட்டமைப்புகள் மற்றும் அரசு ஊழியர் கூட்டமைப்புகள் இணைந்து நடத்தும் பெரும் பேரணியில் தமிழ்நாடு சார்பில் பெருமளவில் ஆசிரியர்களைப் பங்கேற்கச் செய்வதெனவும் இம்மாநிலக்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.
&&&&&&&&&&&&&&&&&
*படவிளக்கம்* இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானங்களை மாநில ஒருங்கிணைப்பாளர் ச.மயில் வெளியிட செ.நா.ஜனார்த்தன்ன் பெற்றுக்கொண்டபோது எடுத்தப்படம் உடன் மாநில நிர்வாகிகள் அ.மாயவன், சே.பிரபாகரன், அ.சங்கர், சிவஸ்ரீ ரமேஷ், த. உதயசூரியன், ஆகியோர்
&&&&&&&&&&&&&
செ.நா.ஜனார்த்தனன்
இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர்
ச.மயில் மாநில ஒருங்கிணைப்பாளர்,
இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு
Comments
Post a Comment