மோசடி
பேராசிரியர் செல்போனுக்கு
லிங்க் அனுப்பி ரூ 6. 39 லட்சம்
மோசடி
வேலுார், ஜூலை 11–
திரிபுரா மாநிலம், பாபா கிராமத்தை சேர்ந்தவர் கவுதம் மந்தர், 50. இவர் வேலுாரில் உள்ள தனியார் கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். ஒரு வாரத்திற்கு முன்பு இவரது செல்போன் வாட்ஸ் ஆப்பில் ஒரு செய்தி வந்தது. அதில் பகுதி நேரம் வேலை செய்தால் பணம் சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை நம்பிய அவர் தனக்கு விருப்பம் இருப்பதாக பதில் அனுப்பினார்.
இதையடுத்து ஒருவர் கேவுதம் மந்தருக்கு போன் செய்து டெலிகிராம் ஆப்பை டவுன் லோடு செய்யும்படி கூறினார். அதன்படி கவுதம் மந்தர் டவுன் போடு செய்தார். சிறிது நேரத்தில் ஒரு லிங்கை அனுப்பி ஓப்பன் செய்யும்படி தெரிவித்தனர். அந்த லிங்கை ஓப்பன் செய்த சிறிது நேரத்தில் கவுதம் வங்கி கணக்கில் இருந்த 6. 93 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டதாக தகவல் வந்தது.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதையறிந்த கவுதம் வேலுார் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
Post a Comment