ஆர்பாட்டம்
ஆர்பாட்டம்
வேலுார், ஜூன் 30–
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி வேலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று காலை ஆர்பாட்டம் மற்றும் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் மகாலிங்கம் தொடங்கி வைத்தார். இதில் மாநில பொது செயலாளர் சரவணன், மாநில துணை செயலாளர் மாரிமுத்து, மாவட்ட தலைவர் சக்திவேல், மாவட்ட செயலாளர் சாமிநாதன், மாவட்ட துணை தலைவர் நரசிம்மன் மற்றும் மார்க் கம்யூ மாவட்ட செயலாளர் தயாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வன விலங்குகளால் ஏற்படும் மனித உயிரிழப்புக்களுக்கு வழங்கும் இழப்பீட்டு தொகையை உயர்த்த வேண்டும், சொந்த வீடு இல்லாத பழங்குடியின மக்களுக்கு ரூ 10 லட்சம் செலவில் அரசு வீடு கட்டித்தர வேண்டும், மானிய உதவியுடன் வங்கி கடன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்பாட்டம் நடந்தது.
தொடர்ந்து மாவட்ட செயலாளர் மகாலிங்கம் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அரசு அதிகாரிகளிடம் கோரிக்கைகள் வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
Comments
Post a Comment